மனிதவளம் ஒரு இனியவரம்
நம்மிடம் இருக்கும் வளங்களில் எல்லாம் தலை சிறந்தது மனிதவளம். இயற்கை கொடுத்த பற்பல வளங்களில் தோண்டத்தோண்ட அழியாத வளம் மனிதவளம். இந்த மனித வளத்தை சீராக்கி, கூராக்கிய பல சமுதயங்களும் நாடுகளும் மிகச்சிறந்த நிலையை அடைந்துள்ளன.ஒரு தனி மனிதனின் உழைப்பால் அவருடைய தலைமுறையே செழித்தொங்குவதை நாம் பார்க்கிறோம் அல்லவா? மகாத்தமா காந்தி என்ற ஒரு தனிமனிதனின் கோட்பாடு மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும், பழக்க வழக்கங்களாலும் சிதறி இருந்த இந்திய மக்களை ஒரு குடையின் கீழ் போராடவைத்தது அல்லவா?
இந்தியர் மட்டும் அன்றி பல்வேறு நாட்டின் தலைவர்களும் மகாத்மா காந்தியை ஒரு உதாரண புருஷனாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளது அல்லவா?
மோகனதாஸ் கரம்சந்த் காந்தியாக இருந்த ஒரு வக்கீலை, அவரில் ஏற்ப்பட்ட மாற்றம் ஒரு மகாத்மாவாக மாற்றியது அல்லவா? அதுதான் சீராக்கிய மனிதவளத்தின் சக்தி.
நாமும் நம்மில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் அனைவரும் மகாத்மாதான்.